விஷ முறிவு
விஷ முறிவு பாம்பு, தேள். நட்டுவாக்காளி மற்றும் விஷப் பூச்சிகள் கடித்தால் கடிவாய்க்கு சிறிது மேலே உடனடியாக சுயிறு கொண்டு இறுக்கமாகக் கட்டினால் விஷம் மேலே ஏறாது.
விஷ முறிவு செய்ய. ஆடு தின்னாப் பாளை இலைச்சாறு. வேலிப் பருத்தி பால் (அ) இலைச்சாறு, வாழைத்தண்டுச் சாறு,வில்வ இலைக் கஷாயம். பலா இலைக் காயம் ஆகியன அருந்தலாம். வாழைப் பட்டை மீது படுக்கவைக்கலாம். பாம்பு சுடியால் வாய் கிட்டிப் போய், வாய் திறக்க முடியாதவர்களை. வாழைப்பட் டையை உரித்துப் பரப்பி, அதன் மீது படுக்க வைத்த சிறிது நேரத்தில் வாய் திறக்கக் கூடிய அளவில் உடலில் மாறுதலைப் பார்க்கலாம். பின், வாழைப் பட்டையின் சாறு, அல்லது வாழைத் தண்டின் தண்ணீரை அருந்தக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நாவல் மரத்தின் இளந்தளிர்களி லிருந்து பிழிந்தெடுத்த சாற்றைத் தேள் கடிக்குமேலே அப்பினால் குணம் கிடைக்கும். தேள் கடித்த இடத்தில் பொட்டாசியம் பர்மாங்கனேட் மிகச் சிறிதளவு வைத்து, ஒன்றிரண்டு சொட்டு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டால் உடனே நிவாரணம் கிடைக்கும். தேள் அல்லது பூச்சி கடித்த இடத்தில் தேனைத் தடவி சூடு காட்டலாம். தேள் கொட்டினால், புங்கை இலைத் துளிரை மோரில் அரைத்துக் கடிபட்ட இடத்தில் தடவி விடலாம். உப்பைத் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, இரண்டு சொட்டு கண்ணில் விடலாம். மஞ்சள் பொடியை நெருப்பில் தூவி, அப்புகையைப் தேள் கொட்டிய இடத்தில் காண்பிக்கலாம். தேள் கொட்டினால், சர்க்கரை வள்ளிக் கிழங்கின் இலைச்சாறு எடுத்து, தேள்கொட்டிய இடத்தில் கனமாகப் பூசலாம்.
நாயுருவி வேரை பட்டாணி அளவில் மூன்று துண்டுகளாக வெட்டி, ஒவ்வொரு துண்டாக வாயிலிட்டு மென்று சாற்றை உள்ளே இறக்கிவிட்டு சக்கையைக் கீழே துப்பவும். இவ்விதமாக, மூன்று துண்டுகளின் சாற்றை விழுங்குவதற்குள் தேள் விஷம் முறிந்துவிடும். 9 மிளகை எடுத்து ஒரு வெற்றிலையில் மடித்து வாயில் போட்டு மென்று விழுங்கி, 4 தேங்காய் பத்தைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்து நன்கு மென்று உண்டால், அரைமணி நேரத்திற்குள் விஷம் முறிந்து கடுப்பு நிற்கும். ஒரு வெங்காயத்தைக் குறுக்காக நறுக்கி, ஒரு பகுதியின் நறுக்கிய பாகத்தை கொட்டு வாயில் வைத்து நன்கு தேய்த்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்றொரு பாகத்தை வைத்துச் சாறு எடுத்து ஒரு கண்ணுக்கு இருதுளிகள் வீதம் விட்டால் விஷம் முறிந்து. கடுப்பு நிற்கும்.
புளியங்கொட்டையளவு புளியம் பழச் சதையையும். அதே அளவு சுண்ணாம்பையும் உள்ளங்கையில் வைத்துப் பிசைந்தால், அதில் தாங்க முடியாத சூடு ஏறும், உடனே அதைச் சிறிய வில்லையாகத் தட்டிக் கொட்டு வாயில் வைத்து அழுத்திப் பிடித்தால் கொட்டு வாயில் ஒட்டிக் கொள்ளும். விஷம் முறிந்து கடுப்பு நிற்கும். நன்கு கழுவிய பத்து துளசி இலைகளை எடுத்துக் கசக்கி தேள் கொட்டிய இடத்தில் வைத்து பத்து நிமிடங்கள் வரை நன்கு தேய்த்து, நெருப்பின் சூடு காண்பித்தால் தேள் விஷம் இறங்கி, கடுப்பு நிற்கும். நட்டுவாக்காலி விஷம் முறிய, கொட்டியவுடன் கோப்பை அளவு தேங்காய்ப் பாலைக் குடிக்க வேண்டும். கொப்பரைத் தேங்காயை மென்று தின்னலாம். முற்றிய தேங்காயையும் மென்று தின்னலாம். பூரான் கடிக்கு, பனை வெல்லத்தை உடன் உட்கொள்ள வேண்டும். நாயுருவி வித்தைப் பொடி செய்து தேன் கலந்து காலையும் மாலையும் உண்ணலாம்.
சிலந்திக் கடிக்கு, ஆடாதொடையிலையைப் பச்சை மஞ்சளுடனும்,மிளகுடனும் சேர்த்தரைத்து, கடித்த இடத்தில் வைத்துக் கட்டலாம். தேள் கொடுக்குப் பச்சிலையைச் சாதிக்காய் சேர்த்தரைத்து, மூன்று நாள்களும், காலை மாலை என மொத்தம் ஆறு வேளை உண்ணலாம். பாம்பு கடிக்கு, பெரியா நங்கையிலையை அரைத்துச் சிறு சுண்டைக்காயளவு சாப்பிட்டால், உடன் குணம் தெரியும். அன்று முழுவதும் உப்பில்லாப் பத்தியமிருந்து தீர வேண்டும். துளசியிலைச் குடிக்கலாம். சாற்றுடன் நல்லெண்ணெய் சேர்த்துக் தும்பையிலை. பூனைக்காஞ்சேரியிலை இவ்விரண்டையும் சேர்த்தரைத்து உண்ணலாம். தீண்டாப் பாளையின் வேரை அரைத்து உண்டு, கடிவாயிலும் அதைப் பூசலாம். ஆடு பேய்ச்சுரையின் வேரை நன்கு அரைத்து அவ்விழுதை உண்ணலாம். மஞ்சள், மரமஞ்சள் ஆகிய இரண்டும் நல்ல பாம்பின் நஞ்சை முறிக்கும் மருந்து.
பாம்புக்கடி மயக்கம்தெளிய, பெருந்தும்பைப் பூச்சாற்றைப் பாம்பு கடிபட்டவர். மூக்கில் நசியமிடுதல் வேண்டும். பாம்புகள் வராமலிருக்க வெண்பூண்டின் சாறெடுத்து இச்சாற்றுடன் நீர்கலந்து பாம்பு இருக்குமிடத்தில் தெளிக்கலாம். பாம்பு,நட்டுவாக்காலி, தேள், சிவந்தி ஆகிய எதன் விஷமும் ஏறாமலிருக்க, பெருமருந்து வேரை வாயிலடக்கிக் கொள்ள வேண்டும்.
பல்லி கடிக்குப் பனைவெல்லம் சிறிது உண்ண வேண்டும்.
எலிக் கடிக்கு, குப்பைமேனி வேருடன் கரிசலாங் கண்ணியிலை, திப்பிலி சேர்த்தரைத்து உண்ண வேண்டும். குப்பை மேனிப் பச்சிலையை நைத்து, எலிகடித்த இடத்தில் ஏழு நாள்கள் கட்ட வேண்டும்.
பூனைக்கடிக்கு, சுண்ணாம்பு, உப்பு, மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்தரைத்து. கடித்த இடத்தில் பூச வேண்டும் குப்பை மேனி வேருடன் பசும்பால் கலந்து அரைத்து நாள்தோறும் குடிக்க வேண்டும். பூச்சிக் கடிக்கு, நன்னாரி வேரினையும் சோற்றுக் கற்றாழையையும் சேர்த்தரைத்து உண்ண வேண்டும். துளசியை அரைத்துத் தேன் கலந்து உண்ண வேண்டும். வண்டுகடிக்குப் பப்பாளி இலையின் சாறெடுத்து வண்டு கடித்த இடத்தல் பூச வேண்டும். செம்பருத்திப் இலைச் சாறெடுத்துக் குடிக்கலாம். குளவிக் கொட்டிற்கு நாயுருவிப் இலையை மை போல் அரைத்துக் கொட்டிய இடத்தில் பூச வேண்டும். புளியையும் சுண்ணாம்பையும் குழப்பிச் சூடாகக் குளவி கொட்டிய இடத்தில் பூச வேண்டும்.
நாய்கடிக்கு,நாட்டு வெங்காயமும் பிரண்டையும் சேர்த்து அரைத்து மூன்று நாள்கள் நாய்க் கடியில் பூச வேண்டும். திருமணித் தக்காளிப் பச்சிலையின் சாற்றை நாள்தோறும் இருவேளை குடிக்க வேண்டும். வெறி நாய் கடித்தால், இலவம் பிசினையும் கல் சுண்ணாம்பையும் சேர்த்தரைத்துக் கடித்த இடத்தில் பூச வேண்டும். நாயுருவி வேரை எலுமிச்சை விதையுடன் சேர்த்தரைத்து ஏழு நாள்கள் உண்ண வேண்டும்.
மனிதக் கடிக்கு. அவுரி வேர், நன்னாரி வேர் ஆகிய இரண்டையும் நன்கு அரைத்துப் பாலுடன் கலந்து மூன்று நாள்கள் உண்ண வேண்டும். அரளி விதை தின்ற நஞ்சு முறிய, கடுக்காய்க் கஷாயம் சிறந்த மருந்து. ஊமத்தை தின்ற நஞ்சு முறிய, பருத்தியிளம் காய்ப்பூவைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும். போதை மருந்தின் நஞ்சு முறிய, பலாக்கொட்டையை வேகவைத்து உண்ண வேண்டும். தாவர நஞ்சு முறிய, புளியாரைக் கீரைச் சாறு இருமடக்கு குடிக்க வேண்டும். எல்லா வகை விஷக்கடிகளுக்கும், அவுரி வேரை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடிக்க வேண்டும்.
பாம்புக்கடி முதலான அனைத்து நஞ்சுகளும் முறிய, கொண்டைச்சாணி, கெட்டிப்பாலை அல்லது நஞ்சு முறிச்சான் எனப்படும் கொடியை வேருடன் பிடுங்கிச் சுத்தமாகக் கழுவி பொடியாக நறுக்கி வெயிலில் சருகு போல் காயவைத்து 50 கிராம் இடித்துத் தூளாக்கி, சலித்து ஒரு கண்ணாடிப் புட்டியில் வைத்து இப்பொடி 2 தேக்கரண்டியுடன், 2 தேக்கரண்டி தேனில் குழைத்து, தினமும் இருவேளை வீதம், 3 நாள்கள் உண்டு வரலாம். பூச்சிக்கடி, வண்டுகடிக்கு, துளிசியிலைப் பொடி - 1 தேக்கரண்டி தேன்-1 தேக்கரண்டியுடன் குழைத்து, சாப்பிட்டு வரலாம்.
0 Comments